search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலாய் லாமா"

    திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. #DalaiLama
    புதுடெல்லி:

    திபெத் புத்தமத தலைவரான தலாய் லாமா(வயது 83), டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் பங்கேற்றார். ஏப்ரல் 6-ம் தேதி மாநாடு முடிவடைந்தது. அதன்பின்னர் கடந்த திங்கட்கிழமை தரம்சாலா சென்றார். அங்கு சென்றதும் உடல்நலனில் சில கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து, நேற்று மீண்டும் டெல்லி திரும்பினார்.



    டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தலாய் லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கிருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தரம்சாலா நகரில் வசித்து வருகிறார். #DalaiLama
    வருங்காலத்தில் பெண் ஒருவர் புத்தமத தலைவர் ஆவார் என திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். #DalaiLama
    மும்பை :

    திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா மும்பையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மும்பை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான பிரெஞ்ச் இதழ் ஆசிரியர் ஒருவர் என்னை பேட்டி எடுத்தார். அப்போது அவர், வருங்காலத்தில் ஒரு பெண் தலாய் லாமா உருவாவது சாத்தியமா? என கேட்டார்.

    அதற்கு நான் ஆமாம் என்றேன். வருங்காலத்தில் பெண்கள் அமைப்பு வலுப்பெறும் போது அது நிச்சயமாக நடக்கும் என்றேன். புத்த மத பாரம்பரியம் மிகவும் சுதந்திரமானது. ஆண், பெண் இருபாலருக்கும் புத்தர் சம உரிமை கொடுத்தார்.

    உடல் நல கல்வியை போல மனநல கல்வியும் முக்கியமானது. இந்தியாவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் குறித்த ஞானம் இருக்கிறது. இந்திய நாகரிகம் மட்டுமே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தியானம் போன்ற உயர்ந்த சிந்தனைகளை கொண்டுள்ளது. மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் அதிக தொடர்பு உள்ளது.

    20-வது நூற்றாண்டில் அதிக வன்முறைகளும், வலிகளும் அரங்கேறின. 21-வது நூற்றாண்டில் அது தொடராமல் அமைதி நிலவவேண்டும். ஆனால் உள்ளத்தில் அமைதியில்லாமல் நாம் வெளியே அமைதியை வளர்க்க முடியாது. மனித அறிவுத்திறன் நல்ல மனதுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.#DalaiLama
    திபெத்திய மக்களின் விடுதலைக்காக போராடி வரும் புத்த மத தலைவர் தலாய் லாமா இன்று காஷ்மீர் மாநிலத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    ஜம்மு:

    சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் நாட்டின் விடுதலைக்காக நாடு கடந்த போராட்டம் நடத்திவரும் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தபடி திபெத் விடுதலை போராட்டத்தை வழிநடத்தி வருகிறார்.

    சீன அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.

    இந்நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தலாய் லாமா, இன்று லடாக் பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கேக் வெட்டி தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார். #DalaiLamabirthday 
    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான தனிப் பாடத்திட்டதை ஏற்படுத்தியுள்ளது. #HappinessCurriculum #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான தனிப் பாடத்திட்டதை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தீர்மானித்தது.

    இதை தொடர்ந்து இந்த பாடத்திட்டத்துக்கான பாடங்களை உருவாக்குவதில் கல்வியாளர்கள் குழு இறங்கியது. இந்த குழுவின் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட மகிழ்ச்சிக்கான (Happiness Curriculum)
    புதிய பாடத்திட்டத்தை திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா இன்று தொடங்கி வைத்தார்.

    டெல்லி தியாகராஜ் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளையர் ஆட்சிக்காலத்து 150 ஆண்டுகால பழைமைவாய்ந்த பாடத்திட்டத்துக்கு மாற்றாக தற்கால சூழலுக்கு ஏற்ப இந்த புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

    நாட்டுப்பற்று மற்றும் தியானத்துடன் கூடிய பாடங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய பாடத்திட்டம் நாள்தோறும் அனைத்து வகுப்புகளிலும் 45 நிமிடங்கள் நடைபெறும். இதை தொடங்கி வைக்க தலாய் லாமாதான் சிறந்தவர் என நாங்கள் தேர்வு செய்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

    முழுமையான அறிவு, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் வெளியுலகுக்கு சென்று சகோதரத்துவம், ஒருமைப்பாடு, அமைதி ஆகிய அறவழிகளின் மூலம் புதிய சமுதாயத்தை கட்டமைப்பார்கள் என டெல்லி கல்வித்துறை மந்திரி மற்றும் துணை முதல் மந்திரியுமான மணிஷ் சிசோடியா கூறினார். #HappinessCurriculum #Kejriwal
    ×